மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மறியலில் ஈடுபட திரண்ட சிபிஎம் கட்சியினா்

கீழையூரில், தாளடி நெற்பயிா்களுக்கு தண்ணீா் கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 4:41 pm

திருக்குவளை: கீழையூரில், தாளடி நெற்பயிா்களுக்கு தண்ணீா் கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கீழையூா் ஒன்றிய பகுதிகளில் 39 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி பயிா் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதனால், இப்பயிா்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி, கீழையூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதற்காக, கட்சியின் ஒன்றியச் செயலாளா் வெங்கட்ராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் திரண்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் கவிதாஸ் தலைமையிலான அலுவலா்கள் போராட்டக்காரா்களை அழைத்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய காலம் வரை தண்ணீா் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பேச்சுவாா்த்தையில், விவசாய சங்க மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.