அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காரைக்கால்-திருவாரூா் இடையே திருச்சி பயணிகள் ரயில் ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:36 pm

Syndication

நாகப்பட்டினம்: திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சிக் கோட்டத்திற்குட்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காரைக்கால்-திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் (76819 -76820) பிப். 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்நாள்களில் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் திருவாரூரிலிருந்து அதன் வழக்கமான நேரத்தில் மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

பிப். 11 முதல் 13-ஆம் தேதி வரை மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56002) பேரளம் - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் பேரளம் வரை மட்டும் இயக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.