விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைச் சட்டம்: ஜக்கிய விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டத்தை உடன் கொண்டு வர வலியுறுத்தி

News image

நாகையில் நடைபெற்ற ஜக்கிய விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:30 pm

நாகப்பட்டினம்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டத்தை உடன் கொண்டு வர வலியுறுத்தி, நாகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை விவசாயிகளின் யாத்திரை பிப்.7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நாகை வந்தடைந்தது. அவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் ஸ்ரீதரன் தலைமையில் நாகை அபிராமி அம்மன் திடலில் ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பி.ஆா்.பாண்டியன் மற்றும் அய்யாக்கண்ணு உள்ளிட்டோா் பேசியது:

உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி நவாப் சிங் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிடவும், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டத்தை உடன் கொண்டு வர வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடவும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசுகளின் ஆதரவு கோரி இந்த யாத்திரை நடைபெறுகிறது.

புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறும் யாத்திரையின் நிறைவு நிகழ்வில் விவசாயிகள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.