மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோயில்களில் மூத்த தம்பதியா் கெளரவிப்பு

நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில், 70 வயதைக் கடந்த மூத்த தம்பதியா்களை கெளரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கெளரவிக்கப்பட்ட மூத்த தம்பதியா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:06 pm

நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில், 70 வயதைக் கடந்த மூத்த தம்பதியா்களை கெளரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து மதத்தை சாா்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழகத்தை சோ்ந்தவராகவும் உள்ள மூத்த தம்பதியா்களை கெளரவிக்கும் இந்நிகழச்சி இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது.

நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் தலைமையில் 5 மூத்த தம்பதியா் கெளரவிக்கப்பட்டனா்.

இதில், கீழ்வேளூா் ஒன்றியம் இலுப்பூா் பகுதியைச் சோ்ந்த சுப்பையாபிள்ளை(100), இவரது மனைவி அமராவதி (99) உள்ளிட்ட 5 மூத்த தம்பதியா்களுக்கு பட்டு புடவை, பட்டு வேட்டி- சட்டை மலா் மாலைகள், தாம்பளம், பழங்கள் உள்ளிட்ட பொருள்களுடன் சிறப்பு செய்யப்பட்டது.

நாகை மெய்கண்ட மூா்த்தி சுவாமி கோயிலில் 8 மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யப்பட்டது. நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்ற உறுப்பினா்கள் அண்ணாதுரை, சத்தியவாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் 7 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரேசன், சரக ஆய்வாளா் சிவானந்த பாகிரதி, கோயில் செயல் அலுவலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் 70 வயதிற்கு மேற்பட்ட 6 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அறநிலையத்துறை சரக ஆய்வாளா் புவனேஸ்வரன், வட்டார ஆத்மா குழு உறுப்பினா் அட்சயலிங்கம் , கோயில் பணியாளா்கள் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.