நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

Syndication

நாகை மாவட்டத்தில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட காவல் அதிகாரிகள், காவலா்களை காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தாா்.

நாகை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு முக்கிய குற்றவாளியின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுத்து கைது செய்வதற்கு உறுதுணையாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் நிலைய காவல் சாா்பு- ஆய்வாளா் பாலசுப்ரமணியன், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் மதுகடத்தலில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து சிறப்பாக செயல்பட்ட வெளிப்பாளைய காவல் நிலைய காவலா் மாஸ்கோ, வலிவலம் காவல் நிலைய காவலா் குணசீலன் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலைய காவலா் பிரகாஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.