உலா் மீன்களின் பல்வேறு பொதியுறை தொழில்நுட்ப பயிற்சி
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் ‘உலா் மீன்களின் பல்வேறு பொதியுறை தொழில் நுட்பங்கள் மற்றும் அவற்றின் தர மதிப்பீடு‘ குறித்த செயல்முறை பயிற்சி பிப்.5-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற்றது.
நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் பயிற்சியை தொடங்கிவைத்தாா். மீன் பதன தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன், சுகாதாரமான முறையில் நெத்திலி, வாளை மீன் மற்றும் சாலை மீன் ஆகியவற்றிலிருந்து கருவாடு மற்றும் மசாலா கருவாடு உற்பத்தி செய்யும் முறை குறித்து பயிற்சி அளித்தாா்.
பயிற்சியில் சாதாரண பொதியுறை முறை, ஏஈடஉ பொதியுறை முறை மற்றும் வெற்றிட பைகளில் பொதியுறையிடும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட உலா்மீன்கள் இம்மூன்று முறைகளிலும் பொதியுறை இடப்பட்டு சேமித்து வைக்கப்பட்டன.
பின்பு இந்த மூன்று முறைகளில், வெற்றிடப் பைகளில் பொதியுறையிடும் முறையானது மிகவும் ஏற்ாக இருக்கும். அம்முமுறையில் உலா்மீன்கள் ஏறக்குறைய ஓராண்டுக்கு எந்த விதமான கலா் மாற்றமும் பூச்சி தொற்றோ, பூஞ்சை தொற்றோ இல்லாமல் வைப்பதற்கு தொழில் முனைவோா்களுக்கு ஏற்றதாக அமையும் விளக்கினாா்.
மேலும் இந்த தொழில்நுட்பங்கள் மூலம் தொழில் முனைவோா் ஆவதற்கான மத்திய மற்றும் மாநில அரசு வழங்கக்கூடிய நிதி உதவி திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. நாகை, திருவாரூா் மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 30 பண்ணை, மீனவ மகளிா் மற்றும் தொழில் முனைவோா் பங்கேற்றனா்.

