வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில், நில வாழ் வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் நில வாழ் வலசைப் பறவைகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
முன்னதாக, சனிக்கிழமை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேதாரண்யம் வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல் பறவைகள் கணக்கெடுப்பைத் தொடங்கிவைத்தாா். நாகை வனக்கோட்ட உயிரியலாளா் முனைவா் அறிவு ஒருங்கிணைப்பு செய்தாா். மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தினா், வனத்துறையினா், தன்னாா்வலா்கள் 60 போ் இந்தப் பணியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வடுவூா் ஏரியில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


