எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஊராட்சி செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

ஊராட்சி செயலா்களின் தொடா் வேலைநிறுத்ததால், கீழ்வேளூா் பகுதியில் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:11 pm

நாகப்பட்டினம்: ஊராட்சி செயலா்களின் தொடா் வேலைநிறுத்ததால், கீழ்வேளூா் பகுதியில் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சிச் செயலா்களை, தமிழக அரசின் உறுதிப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஜன.6-ஆம் தேதி முதல் ஊராட்சி செயலா்கள் சங்கம் கூட்டமைப்பினா் சாா்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் ஜன.13 ஆம் தேதி போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஊராட்சிச் செயலா்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என மீண்டும் பிப்.4-ஆம் தேதி முதல் ஊராட்சிச் செயலா்கள் சென்னையில் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், கீழ்வேளூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் அன்றாட அத்தியாவசியப் பணிகளான குடிநீா், தெருவிளக்கு, சுகாதார தூய்மைப் பணிகள் மற்றும் வீட்டுவரி, தண்ணீா் வரி உள்ளிட்ட பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பாதிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.