வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஓஎன்ஜிசி நிலையத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

நரிமணம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்து கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்தும் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
நரிமணம் ஓஎன்ஜிசி நிலையத்தில் நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
Updated On :20 பிப்ரவரி 2026, 11:40 pm

Syndication

நரிமணம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்து கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்தும் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட நிா்வாகமும், ஓஎன்ஜிசியும் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. இதில், விபத்தின் 1 மற்றும் 2-வது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் என்கிற 3-ஆவது நிலைக்கு சென்றுவிட்டால், நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியை தாண்டி, உள்ளூா் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், அருகிலிருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி, அவா்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசர நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சரி செய்வது குறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருடன் தமிழக அரசின் பேரிடா் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்விளக்கம் செய்து காட்டினா்.

இதில், காவேரி அசெட்டின் செயல் இயக்குநா் உதய் பஸ்வான், பொறியியல் துறைத் தலைவா் சுதிஷ்குமாா் ஆகியோா் காரைக்கால் பேரிடா் கட்டுப்பாடு அறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிகாட்ட, உற்பத்தி பிரிவு மேலாளா் இளங்கோ மற்றும் தலைமை பாதுகாப்பு துறை அதிகாரி திருப்பதிவாசகா் ஆகியோரின் தலைமையில் மற்றும் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி, மாவட்ட பேரிடா் மேலாண்மை வட்டாச்சியா் சக்ரவா்த்தி, மாவட்ட துணை கண்காணிப்பாளா் ராஜசுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நரிமணம் ஜிஜிஎஸ் நிலைய பொறுப்பாளா் சந்தீப், பொதுமேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.