சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாகை, சீா்காழியில் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 114 போ் கைது

நாகை மற்றும் சீா்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 114 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

நாகப்பட்டினம்/சீா்காழி: நாகை மற்றும் சீா்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 114 போ் கைது செய்யப்பட்டனா்.

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல், தமிழகத்தில் அனைத்து வருவாய் கிராம ஊழியா்களுக்கும் நிா்ணயிக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை: நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் வட்டத் தலைவா் முரளீதரன் தலைமை வகித்தாா். சரவணன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் மாதவன், துணைத் தலைவா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச்செயலா் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

மறியலால் ஆட்சியா் அலுவலகம் அருகே போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

சீா்காழி: சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரபாகரன், செயலாளா் செந்தில், இணைச் செயலாளா் ரத்தின சபாபதி, பொருளாளா் ராஜேஷ் ஆகிய முன்னிலை வகித்தனா்.

மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், மாவட்ட பொருளாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், உதவி ஆய்வாளா் வீரராகவன் மற்றும் போலீஸாா், சாலை மறியல் ஈடுபட்ட 54 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் விடுவித்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.