பிளஸ் 1 வகுப்புகள் இன்று தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புகள் வியாழக்கிழமை (ஜூன் 15) தொடங்குகிறது.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புகள் வியாழக்கிழமை (ஜூன் 15) தொடங்குகிறது.
இதுகுறித்து, காரைககால் முதன்மைக் கல்வி அலுவலர் சா. இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 2017-18 ஆம் கல்வியாண்டுக்கான 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 22.5.2017 முதல் 5.6.2017 வரை விநியோகிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமையுடன் (ஜூன்14) பிளஸ் 1 சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு அந்தந்த பள்ளிகளில் முடிவுற்றது. இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் வழக்கம்போல் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com