டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் புதன்கிழமை பேரணி நடத்தினர்.
காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை ( என்.சி.சி) சார்பில் டெங்கு காய்ச்சல் அறிகுறி, மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை, சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியிலிருந்து முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர்.
பள்ளி வளாகத்தில் பேரணியை நலவழித்துறை துணை இயக்குநர் பி.நாராயணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான கருத்துகளை அவர் விளக்கிப் பேசினார்.
பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் கே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மாணவர்களிடையே பேசினார். சுமார் 100 என்.சி.சி. மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகித்தவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தனர். பேரணி ஏற்பாடுகளை என்.சி.சி. பயிற்றுநர் பாலமுருகன், பள்ளி என்.சி.சி.அலுவலர் என்.காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.