கணிதப் பாடத்தின் திறனை வளர்க்கும் விதமாக மாணவர்களிடையே பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்றது.
கோட்டுச்சேரி வ.உ. சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணிதத் துறை சார்பில் மாணவர்களிடையே கணிதப் பாடத்தில் எண் கணிதத் திறனை வளர்க்கும் விதமான போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் நடுநிலை வகுப்பு மாணவர்களிடையே பெருக்கல் வாப்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி, பள்ளி துணை முதல்வர் எஸ். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாரியர் (பொ) மதிவாணன் போட்டியை தொடங்கிவைத்தார். பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியைகள் வசந்தி, சிவசுந்தரி ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவர்களின் வாய்ப்பாட்டுத் திறனை ஆய்வு செய்தனர்.
கணித ஆசிரியர் சுரேஷ், மாணவர்களிடையே பெருக்கல் வாய்ப்பாடு போட்டி போன்ற கணிதத் திறனை வளர்க்கும் பிற போட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
வாய்ப்பாடு போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் ஒப்பித்து திறனை வெளிப்படுத்தினர். பெருக்கல் வாய்ப்பாட்டினை மனனம் செய்வதன் மூலம் கணிதக் கேள்விகளை மிக எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடிவதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படும்போது மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வேண்டும். கணிதம் தொடர்பான இந்த போட்டியானது, மாணவர்கள் கணிதத்தின் மீது ஆர்வத்தை மேம்படுத்துகிறது. இதுபோன்று ஆர்வத்தோடு கலந்துகொள்ளும்போது, திறன் மேம்படுவது மட்டுமல்லாது உயர்கல்விக்கு செல்லும்போது சிறந்த நிலையை அடைய இது துணை நிற்கிறது என ஆசிரியர்கள் கூறினர்.
வாய்ப்பாடு ஒப்பித்தலில் சிறந்த மாணவர்கள் பரிசுக்குத் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டயபுரம் பகுதியில் காலூன்ற முயலும் பட்டாசு ஆலைகள்! அச்சத்தில் கிராம மக்கள்

காரைக்குறிச்சியில் கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு

ஒசூா் அருகே பட்டியலின மக்களின் பொதுப் பாதையை மறித்து முள்வேலி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மனவளக் கலை பயிற்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


