விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பிளஸ் 2: காரைக்காலில் 2,663 பேர் தேர்வு எழுதினர்

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 2,663 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:21 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 2,663 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.  வியாழக்கிழமை தேர்வு தொடங்கிய நிலையில் பல்வேறு தேர்வு மையங்களில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் ஆய்வு நடத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில், தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி நெடுங்காடு, நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய  மையங்களில் பிளஸ் 2 தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி  மையத்துக்குச்  சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித்துறை செய்து தந்துள்ள அடிப்படை வசதி குறித்து கல்வித்துறை துணை இயக்குநர் ஜி.சுப்பிரமணியன் கூடுதல் ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார்.
மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :  காரைக்கால் மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 1,407  மாணவ, மாணவியர்களும், 12 தனியார் பள்ளிகளை சேர்ந்த 915 மாணவ, மாணவியர்களும், மொத்தம் 2,322 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர்.
 இதில் 964 பேர் மாணவர்கள். 1,358 பேர் மாணவிகளாவர். 3 மையங்களில் 253 மாணவர்களும், 88 மாணவியரும் தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர்.  8 மையங்களுக்கென 8 முதன்மை கண்காணிப்பாளர்களும், 8  துறை அலுவலர்களும், 175 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   
தேர்வின்போது முறைகேடுகள் ஏதும் நிகழாத வகையில் கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் 2 பேர் கொண்ட நிலைப்படைக் குழுவும், பறக்கும் படையினரும் பணியில் உள்ளனர்.  அதிமுக்கியத்துவம் கொண்ட பாடத் தேர்வின்போது,   ஒரு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.  தேர்வெழுதும் மாணவர்கள் எவ்வித ஒழுங்கீனச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.