கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

காரைக்கால் கடற்கரையில் வணிக வளாகத்தை சுற்றுலா விடுதியாக மாற்றியமைக்கும் பணி நிறைவு

காரைக்கால் கடற்கரையில் வணிக வளாகத்தை சுற்றுலா விடுதியாக உருமாற்றம் செய்யும் பணி நிறைவுபெற்ற நிலையில்,

Updated On :29 மார்ச் 2018, 3:59 am

காரைக்கால் கடற்கரையில் வணிக வளாகத்தை சுற்றுலா விடுதியாக உருமாற்றம் செய்யும் பணி நிறைவுபெற்ற நிலையில், இதனை மத்திய அரசு சார்பு நிறுவனமான ஐ.டி.டி.சி. ஏற்று நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
காரைக்கால் கடற்கரையில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் மத்திய சுற்றுலாத்துறை நிதியுதவியில், கடற்கரைக்கு வரும் மக்கள் பயன்படும் வகையில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இது ஏறக்குறைய  ரூ.3.5 கோடியில்  30 கடைகளுடன் கட்டப்பட்ட கட்டடம் முறைப்படி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரால் 2012-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
கடைகள் ஏல முறையில் வியாபாரிகளிடம் ஒப்படைத்தும், ஒருவர்கூட 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் தொடங்க முன்வரவில்லை. இதனால் இந்த வளாகத்தை சுற்றுலாவினர் தங்கும் விடுதியாக உருமாற்றம் செய்திட புதுச்சேரி அரசு திட்டம் வகுத்து, மத்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்புதல் பெற்றது. இதற்காக மேலும் சுமார் ரூ.3 கோடி பெறப்பட்டு 2015-ஆம் ஆண்டு 20 தங்கும் விடுதி, 4 சூட் வசதியுடன் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
 இதுகுறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரத்தை புதன்கிழமை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியது :
காரைக்கால் கடற்கரையில் வணிக வளாகத்தை விடுதியாக தரம் உயர்த்தும் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இந்த விடுதியை மத்திய அரசு சார்பு நிறுவனமான இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி) ஏற்று நடத்த சுற்றுலாத்துறைக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோப்புகள் சுற்றுலா செயலர் ஒப்புதல் பெற்று தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேற்கொண்டு கிடைக்கவேண்டிய ஒப்புதல் யாவும் வந்துவிட்டால், புதுச்சேரி காலாப்பேட்டில் ஐ.டி.டி.சி. நடத்தும் அசோக் ஹோட்டல் போல காரைக்கால் கடற்கரை சுற்றுலா விடுதியும் வந்துவிடும். இது அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளதால்,  பேராசிரியர்கள், கல்வியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காரைக்கால் வருகின்றனர். இவர்கள் உள்ளிட்ட சுற்றுலாவினருக்கு கடற்கரை விடுதியில் தங்குவது முழு மனத்திருப்தியை ஏற்படுத்தும். இதுகுறித்து காரைக்கால்  பகுதியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேசி இதற்கான தீர்வை ஏற்படுத்தவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.