ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகை பறித்த 3 பேர் கைது

காரைக்காலில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடைய 

காரைக்காலில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடைய 6 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால். 
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்கால் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமநாதன் (72). எப்போதும் அதிகளவில் நகைகளை அணிந்திருக்கும் இவர், ஜன. 3-ஆம் தேதி காரைக்கால் ஜூபைதா நகரில் உள்ள மாலா என்பவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது, அவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த வைர நகைகள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். 
இதுகுறித்து, ராமநாதன் அளித்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர்  மோகன் ஆகியோர் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.   இந்நிலையில், இச்சம்பவத்தில் சந்தேகப்படும் வகையில் காரைக்கால்மேடு தினேஷ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தினேஷ் நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த மர்லின் (31), பிரதீப் (31), அரவிந்த் (23), செல்வா (23), சுந்தர் (23) ஆகிய 6 பேருடன் சேர்ந்து ராமநாதனிடம் வைர நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தினேசை கைது செய்த போலீசார், அவர் அளித்தத தகவலின்பேரில், புதுச்சேரி தங்கியிருந்த மர்லின், பிரதீப் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் ரூ.1.56 லட்சம் ரொக்கம், செல்லிடப்பேசி, கார் உள்ளிட்ட சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ளஅரவிந்த், செல்வா, சுந்தர் ஆகிய 3 பேரை தேடிவருகின்றனர் என்றார் மகேஷ்குமார் பர்ன்வால். பேட்டியின்போது, காவல் 
கண்காணிப்பாளர் மாரிமுத்து  உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com