காரைக்கால் மாவட்டத் தேர்தல் பார்வையாளர், அரசியல் கட்சியினருடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் காரைக்கால் மாவட்டத்துக்கு மக்களவைத் தேர்தல் பார்வையாளராக (பொது) ஐஏஎஸ் அதிகாரி ஜி. பிரசன்ன ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறமுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள பார்வையாளர் அலுவலகத்தில் காலை 11 முதல் 12 மணி வரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். பார்வையாளரின் அலுவலக தொலைபேசி எண்: 04368-222086, செல்லிடப்பேசி எண்: 9489290029 எனவும் இமெயில் முகவரி ர்க்ஷள்ங்ழ்ஸ்ங்ழ்ந்ஹழ்ஹண்ந்ஹப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் எனவும் தெரிவித்த அவர், எந்தவொரு புகார்கள், தகவல்கள் பகிரப்பட்டாலும் அது ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரி கே.ரேவதி, மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் டி.மாரிமுத்து, வீரவல்லவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.