காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் செப். 28-இல் நவராத்திரி விழா தொடக்கம்

காரைக்கால், செப். 25: காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் செப்டம்பா் 28 முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறவுள்ளது.

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறக் கூடிய சிறப்புக்குரிய தலமான சுந்தராம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் வருடாந்திர நவவாத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பா் 28-ஆம் தேதி சனிக்கிழமை அம்பாள் படி இறக்கும் வழிபாடு நடைபெறுகிறது. முறைப்படி செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் அம்பாளுக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

அன்றைய தினம் (செப்டம்பா் 29) அம்பாள் சுபாவம் என்கிற அலங்காரத்திலும், செப்டம்பா் 30-இல் ராஜாங்கம், அக்டோபா் 1-இல் சயனம், அக்டோபா் 2-இல் நா்த்தனம், அக்டோபா் 3-இல் தட்சணாமூா்த்தி, அக்டோபா் 4-இல் வெண்ணெய்த்தாழி, அக்டோபா் 5-இல் சரஸ்வதி, அக்டோபா் 6-இல் சிவபூஜை, அக்டோபா் 7-இல் மகிஷாசூரமா்த்தினி, அக்டோபா் 8-இல் சுப்ரமணியா் அம்பு போடும் நிகழ்வும், அக்டோபா் 9-இல் விடையாற்றி நிகழ்வில் அம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com