மக்களவைத் தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் மதுக் கடைகளை 4 நாள்கள் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் அமைதியாக நடைபெற ஏதுவாக மதுக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். மக்களவைத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் மதுக் கடைகளை மூடுவதற்கு கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால்துறை துணை ஆணையர் எம். ஆதர்ஷ் மதுக்கடை உரிமையாளர்களுக்கு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது: மக்களவைத் தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மது விற்பனையகங்கள், மதுபானம் விற்பனை செய்ய அனுமதித்த உணவு விடுதிகள், கள், சாராயக் கடைகள் வரும் 16 முதல் 18-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ஆம் தேதியும் மூடப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.