சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் தொடக்கம்
By DIN | Published On : 06th February 2019 07:00 AM | Last Updated : 06th February 2019 07:00 AM | அ+அ அ- |

காரைக்காலில் ஒரு வார காலம் நடைபெறக்கூடிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக கனரக வாகனங்களின் ஆவணங்கள் சோதனை, ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகளை போக்குவரத்து அதிகாரிகள் வழங்கினர்.
காரைக்கால் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை தொடங்கினர்.
முதல் நிகழ்ச்சியாக மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரி பழனிச்சாமி தலைமையில் போக்குவரத்துத் துறையினர்,
போக்குவரத்துக் காவல் நிலையத்தினர் நகரப் பகுதியில் கனரக வாகனங்களின் ஆவணங்களை
ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை ஓட்டுநர்களுக்குத் தெரிவித்தனர். விபத்தில்லா பயணத்துக்கு ஓட்டுநரின் பங்கு குறித்தும் அவர்கள் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளும், கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படும் என போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர். நிறைவாக நடக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...