சுடச்சுட

  

  காரைக்காலில் சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, அமைச்சர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலர் முழுவுருவ சிலை காரைக்கால் கடற்கரை சாலை முகப்பில் உள்ளது. சிங்காரவேலரின் நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் வி. நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். வேளாண் துறை அமைச்சர்கள் ஆர். கமலக்கண்ணன், எம். கந்தசாமி, சட்டப் பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன்,  மாவட்ட  ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். மேலும்  காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்,  மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள், சமாதானக் குழுவினர் பலர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் காரைக்கால் அமைப்பாளரும், முன்னாள் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
  கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் கலந்துகொண்டு, பொதுவுடைமை இயக்க பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வர்க்கத்துக்கு பாடுபட்டவர். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதர். 1925-ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவர். இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவர் சிங்காரவேலர் என காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் அவருக்கு புகழாரம் சூட்டிப் பேசினர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai