துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் குறைகேட்பு
By DIN | Published On : 03rd July 2019 07:48 AM | Last Updated : 03rd July 2019 07:48 AM | அ+அ அ- |

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் ஜூலை 5-ஆம் தேதி குறைகளை கேட்கவுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஜூலை 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், ஜூலை 5-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். புகார்கள் எழுத்து வடிவில் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.