நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 28th March 2019 06:29 AM | Last Updated : 28th March 2019 06:29 AM | அ+அ அ- |

பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அத்திப்படுகை கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், திருநள்ளாறு பகுதி அத்திப்படுகை கிராமத்தில் மார்ச் 25- ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தனிமனித ஆரோக்கியம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, சமூக மேம்பாட்டில் தன்னார்வலர்களின் பங்கு, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்தல், நேர்மையான முறையில் வாக்குப் பதிவு செய்தல், மருத்துவ முகாம் உள்ளிட்ட திட்டங்களுடன் இம்முகாம் நடைபெறுகிறது.
முகாம் முதல் நாளில் மாணவர்கள் அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான புதன்கிழமை நிகழ்வாக, கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் ஏ.குமார் முன்னிலையில், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பல் பரிசோதனை நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...