சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவில், காரைக்கால் நவோதய வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
காரைக்கால் ராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் இப்பள்ளியின் முதல்வர் பி. ஹெலன்மேரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் நவோதய வித்யாலயா பள்ளியில் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 41 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இது நூறு சதவீத தேர்ச்சி ஆகும். பள்ளியளவில் மாணவி ஆர்.சப்த ரூபா 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 80 சதவீதத்துக்கு மேல் 10 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களின் சராசரி 70-74 சதவீதம் ஆகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.