காரைக்கால் பாரதியார் சாலையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் 44-ஆம் ஆண்டு மகோத்ஸவத்தில் திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில்வருடாந்திர மகோத்ஸவம் கடந்த 8-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி பால்குட அபிஷேகமும், 17-ஆம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றன.
கோயில் சன்னிதியில் ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர் நிகழ்வாக சந்தனக் காப்பு, அம்பாள் வீதியுலா, புஷ்பாஞ்சலி, கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் வரும் 26-ஆம் தேதி உத்ஸவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.