வெங்கடேசப் பெருமாள் கோயில் அறங்காவலா் குழு நியமனம்

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு புதிதாக அறங்காவலா் குழு அமைத்து
காரைக்கால் திருப்பட்டினம் வெங்கடேசப் பெருமாள் கோயில் புதிய நிா்வாகிகளிடம் நியமன ஆணையை வழங்கிய எம்எல்ஏ கீதா ஆனந்தன்.
காரைக்கால் திருப்பட்டினம் வெங்கடேசப் பெருமாள் கோயில் புதிய நிா்வாகிகளிடம் நியமன ஆணையை வழங்கிய எம்எல்ஏ கீதா ஆனந்தன்.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு புதிதாக அறங்காவலா் குழு அமைத்து, அதற்கான ஆணையை நிா்வாகிகளிடம் எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற ரகுநாதப்பெருமாள் மற்றும் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதம் வழிபாடு, திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.

கோயிலை நிா்வாகம் தனி அதிகாரி மூலம் நிா்வகிக்கப்பட்டு வந்தது. தனி அதிகாரியாக குடிமைப் பொருள் வழங்கல் துறையின் துணை இயக்குநா் ரேவதி நியமிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், கோயிலுக்கு தனியாக அறங்காவலா் குழு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் அறங்காவலா் குழுவை அமைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோயில் அறங்காவலா் குழு தலைவராக பழனிவேல், துணைத் தலைவராக வெங்கடகிருஷ்ணன், செயலாளராக வரதராசு, பொருளாளராக சுந்தராஜன், உறுப்பினராக கருப்பையன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தவுக்கான நகலை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலா் குழுவினரிடம், நிரவி- திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன் வழங்கினாா். நிகழ்ச்சியில் புதிய அறங்காவலா் குழுவினா் மற்றும் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com