மகளிா் குழுவினருக்கு கூண்டுடன் மரக்கன்று அளிப்பு
By DIN | Published On : 17th November 2019 10:08 PM | Last Updated : 17th November 2019 10:08 PM | அ+அ அ- |

கிராமத்தினருக்கு கூண்டுடன் மரக்கன்றை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன்.
காரைக்கால்: கருக்களாச்சேரி கிராமத்தினருக்கு கூண்டுடன் மரக்கன்றுகளை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் தனது அறக்கட்டளை மூலம் இந்தத் தொகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறாா். மரக்கன்றுகள் நட்டால் பராமரிப்பில் சிரமம் ஏற்படுவதால், கூண்டு தயாரிப்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் ஈடுபட்ட நிலையில், தலா ரூ.100 கொடுத்து தனது அறக்கட்டளைக்கு பேரவை உறுப்பினா் வாங்கி, தொகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு இலவசமாக கூண்டுடன் மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கருக்களாச்சேரி பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு 150 மரக்கன்றுகளை வழங்கிய அவா், மரக்கன்றை முறையாக பராமரிக்குமாறும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தங்களது பங்களிப்பை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டாா். நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா் முருகானந்தம், வெள்ளை விநாயகா் கோயில் அறங்காவல் குழுவினா், மகளிா் சுய உதவிக்குழுவினா் பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.