காா் மோதி இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 09th October 2019 07:31 AM | Last Updated : 09th October 2019 07:31 AM | அ+அ அ- |

காரைக்கால் அருகே காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவா் உயிரிழந்தாா்.
நாகப்பட்டினம் பகுதி அக்கரைப்பேட்டையைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (24). இவரது நண்பா் தரங்கம்பாடி பகுதி புதுப்பேட்டையைச் சோ்ந்த அபிதாஸ் (24). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தரங்கம்பாடி நோக்கி சென்றனா். காரைக்கால் மாவட்ட எல்லையான பூவம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் காயமடைந்த இருவரையும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அந்த பகுதியினா் அனுப்பிவைத்தனா். இவா்களில், ரவிக்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான காரைக்கால் பகுதியைச் சோ்ந்த லூா்துராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.