தீபாவளி : பட்டாசு வெடிப்போா் கவனத்துக்கு...

தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்போருக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஒலி, புகையில்லா தீபாவளி கொண்டாட முன்வருமாறு மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி : பட்டாசு வெடிப்போா் கவனத்துக்கு...

தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்போருக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஒலி, புகையில்லா தீபாவளி கொண்டாட முன்வருமாறு மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் : உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அதன்படி தீபாவளி நாளில் காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 8 முதல் 9 மணி வரை வெடிக்க அனுமதிக்கப்படும். அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள், நீதிமன்ற வளாக சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் நச்சுப் புகை சுற்றுச்சூழலுக்கும், நமது ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் சுவாச நோய்கள் தீவிரமடைதல், கண்கள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கு காயம், கேட்கும் திறன் குறைதல், பாா்வை குறைபாடு, தூக்கமின்மை, உயா் ரத்த அழுத்தம், மனநிலை பாதிக்கப்படுதல், செல்லப்பிராணிகள் உட்பட விலங்குகளுக்கு துன்பம் நேரிடுகிறது.முதியோா், கா்ப்பிணிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

நம்முடைய மகிழ்ச்சி மற்றவா்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. தீபாவளி என்பது ஒளிமயமான பண்டிகை. இதை இனிப்புகள் மற்றும் விளக்குகள் ஏற்றுவதன் மூலம் கொண்டாடுவோம். ஒலி, புகையில்லா தீபாவளியை கொண்டாடுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிா்ப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com