பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd September 2019 03:13 AM | Last Updated : 02nd September 2019 03:13 AM | அ+அ அ- |

காரைக்கால் குட்ஷெப்பெர்டு பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதி மேலகாசாக்குடி பகுதியில் செயல்பட்டுவரும் குட்ஷெப்பெர்டு ஆங்கிலப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேர் விநாயகர் வேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் தங்களது இல்லத்திலிருந்து தயாரித்து வந்த கொழுக்கட்டை, சுண்டல் வைத்து விநாயகரை வழிபாடு செய்து, தொண்டமங்கலம் கிராமத்துக்குச் சென்று கிராம மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாக மாணவர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. பள்ளி ஆசிரியர்கள், சதுர்த்தியின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ், முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G