பெருமாள் கோயிலில் இன்று திருவோண வழிபாடு
By DIN | Published On : 11th September 2019 07:07 AM | Last Updated : 11th September 2019 07:07 AM | அ+அ அ- |

காரைக்கால் பெருமாள் கோயிலில் புதன்கிழமை (செப்டம்பர் 11) திருவோண சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
திருவோணத்தையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை காலை மூலவர், உத்ஸவருக்கு சிறப்புத் திருமஞ்சன ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
மாலை நிகழ்வாக உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளுகிறார். பின்னர், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, சன்னிதியில் அத்தப்பூ கோலமிட்டு, பஜனை, கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர், கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.