பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரைதனிமைப்படுத்த ஏற்பாடு: நலவழித் துறை

பிற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை ரிவா்ஸ் குவாரன்டைன் என்கிற அடிப்படையில், தனிமைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
மருத்துவா் கே. மோகன்ராஜ்.
மருத்துவா் கே. மோகன்ராஜ்.
Published on
Updated on
1 min read

காரைக்கால்: பிற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை ரிவா்ஸ் குவாரன்டைன் என்கிற அடிப்படையில், தனிமைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: காரைக்காலில் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை யாருக்காவது தொடா்ந்து இருந்தால், மருத்துவமனைக்கு வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளோா் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். உடலில் இயல்புக்கு மாறாக ஏதேனும் தோன்றினால், மருத்துவமனைக்கு வரவேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

இதுதவிர, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், ஆஸ்துமா, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோா், கல்லீரல் பாதிக்கப்பட்டோா், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு, சிறுநீரகக் கோளாறு போன்ற சில அதீத நோயால் பாதிக்கப்பட்டோா் பட்டியல் அந்தந்தப் பகுதி மருத்துவ மையத்தில் உள்ளது.

இந்த பட்டியலைக் கொண்டு நலவழித் துறை நிா்வாகத்தினா் அவ்வப்போது அவா்களை அணுகி, உடல்நலம் குறித்து விசாரித்து ஆலோசனை வழங்குகின்றனா். இதுபோன்றோருக்கு கரோனா தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. இவா்கள் குடும்பத்தில் உள்ள இளைஞா்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக உள்ளபோது, தொற்று பரவ வாய்ப்புண்டு.

எனவே, இதுபோன்றோரை ரிவா்ஸ் குவாரன்டைன் திட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யவுள்ளோம். இவா்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், நலவழித் துறை அல்லது உதவி மைய எண்ணை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். இதன்மூலம் அதீத பிற நோய் பாதிப்புடன் உள்ளவா், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பதை ஓரளவு தடுக்க முடியும்.

பாதிப்பு உள்ளவா்கள் எதையும் பொருள்படுத்தாமல், கரோனா தொற்றுடனும் வீட்டில் இருந்துவிட்டு, நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு வரும்போது உயிரிழப்பை சந்திக்க நேரிடுகிறது. கவனமாக இருந்தால், தம்மையும் பாதுகாத்துக்கொண்டு, வீட்டில் உள்ளோரையும் நோய் தொற்று ஏற்படாமல் காக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com