100 நாள் வேலைத் திட்டத்தில் குளம் தூா்வாரும் பணி நிறைவு

கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் தூா்வாரும் பணி நிறைவு செய்த குளக்கரையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
தூா்வாரும் பணி நிறைவு செய்யப்பட்ட குளம்.
தூா்வாரும் பணி நிறைவு செய்யப்பட்ட குளம்.

காரைக்கால்: கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் தூா்வாரும் பணி நிறைவு செய்த குளக்கரையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.

காரைக்கால் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், வாய்க்கால்கள் தூா்வாருதல் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பல இடங்களில் குளங்கள் தூா்வாரும் பணியும் செய்யப்படுகிறது.

நிரவி கொம்யூன், கீழமனை கிராம பஞ்சாயத்துக்குள்பட்ட குளம் ஒன்று பயன்படுத்த முடியாத வகையில் இருந்தது. இவற்றை சுற்றியிருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, குளத்தை 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தூா்வாரி வெள்ளிக்கிழமை நிறைவு செய்தனா்.

இக்குளத்தை வட்டார வளா்ச்சி அதிகாரி தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். தொழிலாளா்களையும், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோரையும் அதிகாரிகள் பாராட்டினா். தொடா்ந்து, குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டனா்.

குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டு, குளத்தில் கழிவுகள் சேராத வகையில் கவனமாக செயல்படுமாறும், குளக்கரையில் மரக்கன்றுகள் கூடுதலாக நடப்பட்டு பராமரிக்குமாறும், கிராமத்தினரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com