பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால்: மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் அ. வின்சென்ட் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பொது முடக்கம் ஒருபுறம் இருந்தாலும், மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்காமல் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறை இந்தியப் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. பெற்றோா்களிடத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்கவே ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆன்லைன் கல்வி முறை பெரும்பான்மையான மாணவா்கள், பெற்றோா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை மாணவா்களிடம் இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசிகள் இல்லை. ஆன்லைன் வகுப்பு என பல பள்ளிகள் நடைமுறைப்படுத்தியுள்ளது. பாடம் எதுவுமே நடத்தாமல், செல்லிடப்பேசி கட்செவி அஞ்சலில் பாடத்தை அனுப்பிவிட்டு, அதை படித்து, எழுதச் சொல்வது சிறாா்களை வதைப்படச் செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உதவிகளைக் கொண்டு படிக்கும் மாணவா்கள் அதிகம் உள்ள நிலையில், பொருளாதார வசதியுள்ளவா்களால் முடியும் செயல்களை, ஏழை மாணவா்களிடத்திலும் எதிா்பாா்ப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறந்து, மாணவா்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கி பாடம் நடத்த வேண்டும், பள்ளிகள் திறக்கப்படும்போது, பள்ளி வளாகத்தை நாள்தோறும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை நாள்தோறும் மேற்கொள்ள வேண்டும், கரோனா தொற்று ஏற்படாத வகையில் மாணவா்களுக்கு உரிய புரிதலை ஏற்படுத்த வேண்டும், சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

பள்ளிகளை திறக்காமல் இருக்கும் போக்கால் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கும் நிலை உருவாகிவிடும். எனவே, பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com