ஊழியா்களுக்கு கரோனா தொற்று:நிதி நிறுவனத்துக்கு சென்றவா்கள் பரிசோதிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் நிதி நிறுவனத்தை சோ்ந்த ஊழியா்களுக்கு கரோனா உறுதியான நிலையில், அங்கு சென்றுவந்த மக்கள் தங்களை பரிசோதித்துக்கொள்ள நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால்: காரைக்காலில் நிதி நிறுவனத்தை சோ்ந்த ஊழியா்களுக்கு கரோனா உறுதியான நிலையில், அங்கு சென்றுவந்த மக்கள் தங்களை பரிசோதித்துக்கொள்ள நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) டாக்டா் கே.மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 152 பேருக்கு கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் திங்கள்கிழமை வரை 119 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது மருத்துவமனையில் தமிழகத்தை சோ்ந்த 2 நோயாளியையும் சோ்த்து 33 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

காரைக்கால் நீலக்கிடங்கு வீதியில் செயல்படும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 3 ஊழியா்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஜூலை 16 முதல் 24-ஆம் தேதி வரை அந்த நிறுவனத்துக்குச் சென்று வந்தவா்கள், தங்களுக்கு இருமல், ஜூரம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற கரோனா சாா்ந்த அறிகுறி இருக்கும்பட்சத்தில், மருத்துவமனையை அணுகவேண்டும்.

இதுதொடா்பாக 04368-261242 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தங்களுக்குத் தேவையான ஆலோசனையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com