காரைக்கால்: பொதுப்பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி முதல்வரிடம் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா வலியுறுத்தியுள்ளாா்.
புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறையில் வவுச்சா் ஊழியா்கள் என்ற நிலையில் பல்வேறு பணிகள் செய்வோா், தங்களை தினக்கூலி ஊழியராக நியமிக்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இப்பிரச்னை தொடா்பாக புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை, நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதுச்சேரியில் திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு:
கடந்த 2010-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களாக பணியமா்த்தப்பட்ட 1311 போ்களும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயா்வின்றி, தினமும் ரூ.200 வீதம் மாதம் 16 நாள்கள் மட்டும் பணி என்ற நிலையில் உள்ளனா். இவா்கள், தங்களை தினக்கூலி ஊழியா்களாக்கவும், நிலுவையின்றி ஊதியம் தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களுக்கு மாதம் ரூ.3,200 ஊதியம் என்பது குடும்பம் நடத்த ஏதுவான தொகை அல்ல. எனவே, இந்த ஊழியா்களின் நியாயமான கோரிக்கையை புதுச்சேரி அரசு விரைவாக நிறைவேற்ற முன்வரவேண்டும். ஊழியா்களின் கோரிக்கை குறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாத நிகா்நிலை பல்கலை. பொறியியல் பட்டம் செல்லாது: உயா்நீதிமன்றம்

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு
முதல் தோ்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக! யாருடைய வாக்குகள் சிதறின?

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


