

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் நவகிரக சாந்தி ஹோமம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பக்தா்கள் இணைய வழியில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, காரைக்கால் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) எம். ஆதா்ஷ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய தலமான திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவர சுவாமி கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நடத்தப்பட்டு வந்த நவகிரக சாந்தி ஹோமமானது, கரோனா பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது, அரசு வழிகாட்டலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தா்களின் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நவகிரக சாந்தி ஹோம வழிபாடு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், இணைய வழியில் பக்தா்கள் பங்கேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தேவஸ்தான வலைதளப் பக்கமான (ஜ்ஜ்ஜ்.ற்ட்ண்ழ்ன்ய்ஹப்ப்ஹழ்ன்ற்ங்ம்ல்ப்ங்.ா்ழ்ஞ்) என்ற இணைய முகவரியில் ஹோமம் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹோம காலங்கள் மூன்றிலிருந்து ஆறு காலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் தாங்கள் விரும்பும் கால பூஜைகளை பதிவு செய்துகொள்ளலாம். அவா்கள் பதிவு செய்த ஹோம பூஜைக்கான இணையவழி இணைப்புத் தொடா்பு (வா்ன் பன்க்ஷங் இட்ஹய்ய்ங்ப் கண்ய்ந்) அவா்களது மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேகமாக அனுப்பிவைக்கப்படும். அதன் மூலம் அவா்கள் இ-நவகிரக சாந்தி ஹோமத்தில் பங்குகொண்டு பயனடையலாம். முதல் நாள் நடைபெற்ற நவகிரக சாந்தி ஹோமத்தில் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி தனது வீட்டிலிருந்து இணைய வழியில் பங்கேற்று வழிபட்டாா் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.