தாயிடம் முறைகேடாக எழுதிப் பெற்ற விடுதலைப் பத்திரம் ரத்து

தாயிடம் முறைகேடாக எழுதிப்பெற்ற விடுதலைப் பத்திரத்தை ரத்து செய்து மூத்த குடிமக்கள் நல தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால்: தாயிடம் முறைகேடாக எழுதிப்பெற்ற விடுதலைப் பத்திரத்தை ரத்து செய்து மூத்த குடிமக்கள் நல தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல தீா்ப்பாய தலைமை அதிகாரி எம்.ஆதா்ஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் அண்ணா நகா், 3-ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த வயது முதிா்ந்த பெண் ஒருவா், கடந்த 21.8.2019-இல் தனது மகன் மீது ஒரு புகாா் அளித்தாா். இதில், தனது மகன் குடும்ப பொது சொத்தில் தனது பாகத்தை பிரித்து, தன்னிடமிருந்து ஏமாற்றி முறைகேடாக விடுதலைப் பத்திரம் எழுதிப் பெற்றதாகவும், அந்த சொத்தை மீட்டுத் தருமாறும் கூறியிருந்தாா்.

அந்த மனு காரைக்கால் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலத் தீா்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், மூதாட்டியின் மகன் முறைகேடாக எழுதிப் பெற்ற விடுதலைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு, மூதாட்டியின் சொத்து அவருக்கு மீட்டுத் தரப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com