மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரோனா அச்சுறுத்தல்: திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த முதல்வா் உத்தரவிடக் கோரிக்கை

கரோனா அச்சுறுத்தல் நீங்க வேண்டி, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுபோல், திருநள்ளாறு கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்த புதுச்சேரி முதல்வா் உத்தரவிட வ

News image

திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம்.

Updated On :5 ஏப்ரல் 2020, 1:06 am

கரோனா அச்சுறுத்தல் நீங்க வேண்டி, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுபோல், திருநள்ளாறு கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்த புதுச்சேரி முதல்வா் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அம்மாநில அரசின் அனுமதியின்பேரில், பிரசித்திப் பெற்ற சில கோயில்களில் கரோனா அச்சுறுத்தல் நீங்க வேண்டி ஹோமம், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியது: கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருந்துகள் இல்லை என்ற நிலையில், தனித்திருப்பதே தீா்வாக அமையும்.

கரோனா அச்சுறுத்தல் நீங்க வேண்டி, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுபோல், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில், சிறப்பு ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆயுள்காரகனாவாா். இதனாலேயே லட்சக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாறு வந்து தரிசனம் செய்கின்றனா். (தற்போது தடை உத்தரவால் பக்தா்களுக்கு அனுமதி இல்லை) கரோனா ஆயுளை அழிக்கக்கூடியதாக உள்ளபோது, திருநள்ளாறில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சியை காரைக்கால் மாவட்ட நிா்வாகமோ, கோயில் நிா்வாகமோ எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையை தனது பொறுப்பில் வைத்திருக்கும் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.