திருநள்ளாறு வீரன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 05th December 2020 05:45 AM | Last Updated : 05th December 2020 05:45 AM | அ+அ அ- |

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ வீரன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு நளன் குளத்துக்கு கிழக்கே ஸ்ரீ பொம்மி வெள்ளையம்மா சமேத ஸ்ரீ வீரன் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை இரவு தொடங்கியது. வியாழக்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால பூஜையும், வெள்ளிக்கிழமை காலை 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, காலை 9.45 மணியளவில் கோயில் விமானத்தில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி மகா தீபாராதனை காட்டினா்.
பின்னா், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், வீரன் மருளாளிகள் செய்திருந்தனா்.