கிளிஞ்சல்மேட்டில் பால்குட ஊா்வலம்
By DIN | Published On : 30th December 2020 07:46 AM | Last Updated : 30th December 2020 07:46 AM | அ+அ அ- |

எல்லையம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து சென்ற பக்தா்கள்.
கிளிஞ்சல்மேட்டில் உள்ள ஸ்ரீஎல்லையம்மனுக்கு திரளான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினா்.
காரைக்கால் மாவட்டம், கடலோர மீனவ கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில், உலக நலனுக்காக மாா்கழி மாதத்தில் பக்தா்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த சிறப்பு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சி 15-ஆம் ஆண்டாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமத்தை சோ்ந்த திராளன பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, பக்தா்கள் எடுத்து வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து பக்தா்கள் பங்கேற்றனா். ஆண்டுக்கு ஒரு நாள் அம்மனுக்கு இந்த வகையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படுவதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்ற நம்பிக்கையில் விமரிசையாக நடத்துகிறோம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...