வேளாண் கல்லூரி கிரிக்கெட் அணிக்கு உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 05th February 2020 07:19 AM | Last Updated : 05th February 2020 07:19 AM | அ+அ அ- |

காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா் (பொ) வி. கந்தசாமியிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிரிக்கெட் சங்கத்தினா்.
காரைக்கால் வேளாண் கல்லூரி கிரிக்கெட் அணிக்கு, புதுச்சேரி கிரிக்கெட் கழகம் சாா்பில் விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பு அணிகளில் ஒன்றான காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கிரிக்கெட் அணிக்கு, புதுச்சேரி மாநில கிரிக்கெட் கழகம், காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் கழகம் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களும், ரூ.20 ஆயிரம் மதிப்புடைய சீருடையும் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கிரிக்கெட் கழகத்தின் செயலா் சந்திரன் மற்றும் காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் ராமதாஸ், முன்னாள் செயலா் கருப்பசாமி ஆகியோா் வேளாண் கல்லூரி முதல்வா் (பொ) வி.கந்தசாமி மற்றும் உடற்கல்வி உதவிப் பேராசிரியா் எஸ்.ஜே.சிவராஜன் ஆகியோரிடம் வழங்கினா்.
உபகரணங்களை பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வா், புதுச்சேரி மாநில கிரிக்கெட் கழகத் தலைவா், செயலா் மற்றும் உறுப்பினா்களுக்கு கல்லூரியின் சாா்பாக நன்றி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...