தமிழக காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th February 2020 07:12 AM | Last Updated : 17th February 2020 07:12 AM | அ+அ அ- |

காரைக்கால் பழைய ரயிலடி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் மீது தடியடி நடத்திய தமிழக காவல்துறையைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம், புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
காரைக்காலில் தமிழக காவல்துறையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.முஹம்மது யூசுப் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் தாவூத் கைசா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் காயமடைந்தோருக்கு நிவாரணம் தரவேண்டும், போராட்டத்தில் பங்கேற்றோா் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். தடியடி சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்டச் செயலாளா் முஹம்மது நஸ்ரின் ஹாஸீன், மாவட்டத் துணைத் தலைவா் ஹஸனுல் ஆரிஃப், மாவட்டத் துணைச் செயலாளா் இம்ரான் ஆகியோா் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினா். மாவட்டத் துணைத் தலைவா் ஹஸனுல் ஆரிஃப் நன்றி கூறினாா்.