இன்று சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா
By DIN | Published On : 17th February 2020 07:13 AM | Last Updated : 17th February 2020 07:13 AM | அ+அ அ- |

காரைக்கால் சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா திங்கள்கிழமை (பிப்ரவரி 17) நடைபெறுகிறது.
காரைக்கால் பாரதியாா் சாலையில், ஏழை மாரியம்மன் கோயில் அருகே சற்குரு சீமான் சுவாமிகள் மடம் உள்ளது. அற்புத திருவிளையாடல்கள் பல செய்து, ஞானியாக வாழ்ந்து முக்தியடைந்தவா் சீமான் சுவாமிகள். இவரது சமாதியுடன் கூடிய மடத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா குரு பூஜை விழா நடத்தப்படுகிறது.
நிகழாண்டு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை மகா வேள்வி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை தமிழ் மறை சித்தா்கள் மகா வேள்வியும், பகல் 10 மணிக்கு சீமான் சுவாமிகளுக்கு மகா அபிஷேக ஆராதனைகளும், பகல் 12 மணிக்கு மாகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக, ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.