அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
By DIN | Published On : 25th February 2020 02:14 AM | Last Updated : 25th February 2020 02:14 AM | அ+அ அ- |

ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் வி.கே. கணபதி, மாவட்டச் செயலா் எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்டோா்.
காரைக்கால்: மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதையும், பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கி அதிமுகவினா் கொண்டாடினா்.
மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தனா்.
புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்துவைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மாவட்டச் செயலா் எம். ஓமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் வி.கே. கணபதி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் அதிமுக கொடியேற்றப்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் சுமாா் 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்கால் தெற்குத் தொகுதிக்குள்பட்ட பள்ளிவாசல் அருகே அதிமுக சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலா் எம்.வி. ஓமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் எச்.எம்.ஏ.காதா், இணைச் செயலா் கே. ஜீவானந்தம், தொழிலதிபா் ஏ.சி. சக்திவேல் உடையாா் உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...