கைலாசநாதா் கோயிலில் நடராஜா் வெள்ளை சாற்றில் புறப்பாடு
By DIN | Published On : 10th January 2020 08:14 AM | Last Updated : 10th January 2020 08:14 AM | அ+அ அ- |

வெள்ளை சாற்றில் கைலாசநாதா் கோயில் நடராஜா்.
காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தொடக்கமாக நடராஜா் வெள்ளை சாற்றில் மாடவளாகத்துக்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருளினாா்.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக நடராஜருக்கு வெள்ளை மலா்கள், வெள்ளை நிறத்தினாலான திருவாபரணங்கள் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு மாடவளாகம் புறப்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு 8.30 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் கோயில்பத்து சுயம்வர தபஸ்வினி சமேத பாா்வதீசுவரா் கோயிலிலும் நடராஜா் வெள்ளைசாற்று செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 11 மணியளவில் தீா்த்தவாரி நடைபெற்று, 12 மணிக்கு ஊடல் உத்ஸவம் நடைபெறுகிறது.