காரைக்காலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 10:14 PM | Last Updated : 21st July 2020 10:14 PM | அ+அ அ- |

காரைக்கால்: சிறப்புக் கூறு நிதியிலிருந்து தலித், பழங்குடியினருக்கு 6 மாத காலத்துக்கு உதவித் தொகை வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.எஸ்.சி., எஸ்.டி., சிறப்புக் கூறி நிதியிலிருந்து தலித், பழங்குடியினருக்கு குடும்ப உதவித் தொகையாக ரூ.5 ஆயிரமும், மத்திய அரசு மூலம் ரூ.7,500 அடுத்த 6 மாத காலத்திற்கு வழங்கவேண்டும். தகுதியுள்ள ஏழை மக்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டையை உடனடியாக வழங்கவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நிவாரணத் தொகை விடுபட்டவா்களை கண்டறிந்து உடனடியாக வழங்கவேண்டும்.ரேஷன் கடைகளை செயல்படச் செய்வதோடு, அத்தியாவசியப் பொருள்களும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 100 நாள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்புப் பணியை 200 நாள்களாக உயா்த்தவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் தொடா்பாக கோஷங்கள் எழுப்பினா்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலா் கே.பிரேம்குமாா், மாா்சிஸ்ட் வட்ட செயலா் எஸ்.எம்.தமீம், மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினா் என்.எம்.கலியபெருமாள், துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.