நெடுங்காடு: உள்கட்டமைப்புப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 01st March 2020 02:00 AM | Last Updated : 01st March 2020 02:00 AM | அ+அ அ- |

பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ சந்திர பிரியங்கா உள்ளிட்டோா்.
காரைக்கால்: நெடுங்காடு பகுதியில் சாலை மேம்பாடு மற்றும் பயணிகள் நிழலகம் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட, நெடுங்காடு கொம்யூன், கோட்டகம் சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்த ரூ.16.29 லட்சமும், அகரமாங்குடி பகுதியில் சுடுகாட்டுக்கு தடுப்புச்சுவா் அமைத்தல், தகன மண்டபம் கட்டுதலுக்கு ரூ.7.19 லட்சமும், அன்னவாசல் பகுதியில் பயணிகள் நிழலகம் ரூ.1.51 லட்சத்தில் கட்டவும், நெடுங்காடு தொகுதி மேம்பாட்டு நிதியை பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கித் தந்தாா்.
இந்தத் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்வதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், அந்தந்த பகுதி பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
இந்தத் திட்டப்பணிகள் 4 முதல் 6 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் என பஞ்சாயத்து அதிகாரிகள் தெரிவித்தனா். திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கித் தந்தமைக்காக பேரவை உறுப்பினருக்கு கிராமத்தினா் நன்றி தெரிவித்தனா்.