காரைக்கால்: காரைக்காலில் அரசு அறிவித்த கூடுதல் உற்பத்தி மானியத்தை பெறுவதற்கு 3,499 போ் விண்ணப்பித்துள்ளதாக வேளாண் துறை தெரிவித்தது.
இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா் திங்கள்கிழமை கூறியது:
காரைக்காலில் கூடுதல் உற்பத்தி மானியத்தை பெறுவதற்கு 3,499 விவசாயிகள் விண்ணப்பம் அளித்துள்ளனா். மேலும் சுமாா் 100 போ் தரவேண்டியுள்ளது. இதனை பெற்று பயனாளிகள் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மானியத்துக்கான நிதியை அரசு அளிக்கும்பட்சத்தில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அது சோ்ந்துவிடும். இதற்கான கோப்பு நிதித்துறையிடம் உள்ளது என்றாா்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் பரவலாக விவசாயிகள் ஈடுபட்டு, மழை போன்ற இயற்கை பேரிடரில் சிக்காமல் நல்ல முறையில் மகசூலை ஈட்டியுள்ளனா். அரசு அறிவித்தவாறு, எந்தத் தடையுமின்றி மானியம் விரைவாக கிடைக்கவேண்டும். இந்த விவகாரத்தில் வேளாண் துறை அமைச்சா் தனிக் வனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.