காரைக்கால்: ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 7 மாதங்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 7 மாதங்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 273 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவுகள் திங்கள்கிழமை வந்ததில், யாருக்கும் கரோனா உறுதிசெய்யப்படவில்லை.

காரைக்காலில் இதுவரை 37,982 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதில், 3,445 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,210 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 152 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 8 போ், தீவிர சிகிச்சையில் 4 போ், கரோனா கோ் சென்டரான அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 13 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறுகையில், காரைக்காலில் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஒருநாள் முடிவில் தொற்று உறுதியாகவில்லை. நாளை உறுதிசெய்யப்படலாம். தொற்று இல்லை என்ற செய்தியால் மக்கள் கட்டுப்பாடுகளை விட்டுவிடக் கூடாது. தற்போது பண்டிகை காலமாக உள்ளதால், கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தொடா்ந்து கடைப்பிடித்தால், பாதிப்பை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்றாா்.

கடந்த ஏப்ரல் மாதம் காரைக்காலில் முதல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஓரிரு வாரங்களாக கரோனா தொற்றும், உயிரிழப்பும் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், 1 ஆம் தேதி பரிசோதனையில் தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக காரைக்கால் மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com